வெளிநாட்டிலிருந்து வந்த உத்தரவு : இளம் தம்பதியின் மோசமான செயல் அம்பலம்
கஹவத்தை பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளை மோட்டார் சைக்கிள்களில் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகித்து வந்த தம்பதியரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கஹவத்தை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினர் நேற்று முன்தினம் மேற்கொண்ட யுக்திய நடவடிக்கையின் போது இந்த தம்பதியை கைது செய்துள்ளனர்.
05 கிராம் 425 மில்லிகிராம் ஹெரோயினுடன் ஹகல, ஹுங்கம, எம்பிலிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த ரசிக சம்பத் என்ற 30 வயதுடைய சந்தேக நபரும் 25 வயதுடைய அவரது மனைவியையும் கைது செய்துள்ளனர்.
போதைப்பொருள்
வாட்ஸ்அப் மூலம் வெளிநாட்டிலிருந்து கடத்தல்காரரால் அறிவிக்கப்பட்ட இடத்தில் சந்தேக நபர்களால் ஹெரோயின் போதைப்பொருள் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த தம்பதி மோட்டார் சைக்கிளில் சென்று பெல்மடுல்ல, பலாங்கொடை பகுதியில் கடத்தல்காரரால் அறிவிக்கப்பட்ட இடத்தில் போதைப்பொருள் பொதிகளை நுட்மாக வைத்து அந்த இடத்தை புகைப்படம் எடுத்து வெளிநாட்டிற்கு உள்ள நபருக்கு அனுப்பி வைப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல்காரர்கள், 25 வயதுடைய சந்தேக நபரின் மனைவியின் பெயரில் மீரிகம இலங்கை வங்கிக் கிளையின் கணக்கில் நாளாந்தம் 15,000 ரூபாவை வரவு வைப்பதாகவும் விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.





சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam
