கோர விபத்தில் இளம் தம்பதியினர் பலி
கம்பஹா - கிரிந்திவெல வீதி 231 இல் ஹேனகம சந்தியில் இடம்பெற்ற கோர விபத்தில் இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ளதாக வெலிவேரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேருந்தும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் உயிரிழந்த இளம் தம்பதியினர்
இந்த விபத்தில் 26 வயது கிஹான் யண்டில் ராஜபக்ஷ, 21 வயதான அவரது மனைவி நடிசா தேஜா ஆகிய இளம் தம்பதியினரே உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் நேற்று காலை 7.00 மணியளவில் மோட்டார் சைக்கிளில் தமது பணியிடத்திற்கு சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கிரிந்திவெல டிப்போவிற்கு சொந்தமானதாக கூறப்படும் அரச பேருந்து கம்பஹாவிலிருந்து கிரிந்திவெல நோக்கி செலுத்தப்பட்டதுடன் மோட்டார் சைக்கிள் கம்பஹா நோக்கி சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பில் வெலிவேரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.