தனது முச்சக்கர வண்டியிலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்
மாத்தறை திக்வெல்ல பகுதியில் முச்சக்கர வண்டி கவிழ்ந்ததில் இளைஞன் ஒருவர் உடல் நசுங்கி துரதிஷ்டவசமாக உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் ரதம்பல வீதியைச் சேர்ந்த 31 வயதான ஹேவா கலுகபுகே ஹசன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில் ரதம்பல வீதியில் வலஸ்கலைக்கு அருகில் விபத்து ஏற்பட்டுள்ளது.
உடல் நசுங்கி
விசாரணையில், முச்சக்கர வண்டி வீதியில் உள்ள சுவரில் மோதி கவிழ்ந்துள்ளது. அதன் கீழ் உடல் நசுங்கி இளைஞனுக்கு மரணம் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
மற்றொரு முச்சக்கர வண்டியின் சாரதியின் தகவலின் பேரில், வலஸ்கல பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று, முச்சக்கர வண்டியின் கீழ் நசுக்கப்பட்ட இளைஞனை சுவசரிய ஆம்புலன்ஸ் சேவை மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
எனினும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் இளைஞன் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரேத பரிசோதனையில், வாகனத்தில் நசுங்கியதால் ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக மரணம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
you may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் வழுக்கி விழுந்த தமிழ், பதறி அடித்து ஓடிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
