யாழில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் - துன்னாலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ். போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று (07.08.2023) காலை சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
துன்னாலை மத்தி - கோயில் கடவையைச் சேர்ந்த சங்கர் சஞ்ஜீவன் (வயது 20) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
தலைக்கவசம் அணியாத நிலை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இவர் கடந்த முதலாம் திகதி இரவு மோட்டார் சைக்கிள் பழக முயன்ற போது மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானது.
தலைக்கவசம் அணியாத நிலையில் படுகாயமடைந்த இளைஞர் மந்திகை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். மரண விசாரணைகளை யாழ். போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிரேம்குமார் மேற்கொண்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 14 மணி நேரம் முன்

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri
