சாரதியின் கவனக்குறைவால் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்
மந்துரங்குளிய நகருக்கு அருகில் மோட்டார் சைக்கிள் மீது லொறி ஒன்று மோதியதால் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் மேலும் ஒருவர் காயமடைந்து புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
புத்தளம் ஜயபிம பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய சுரேந்திர அனுருத்திக என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞன்
உயிரிழந்த இளைஞன் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் புத்தளம் நோக்கி பயணித்த போது, புத்தளத்திலிருந்து பயணித்த மரக்கறிகளை ஏற்றிச் சென்ற லொறியொன்று மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.
லொறியின் சாரதியின் கவனக்குறைவே விபத்துக்கான காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லொறியின் சாரதி
விபத்தில் படுகாயமடைந்த இரு இளைஞர்கள் சிகிச்சைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அனுருத்திக ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து தொடர்பில் லொறியின் சாரதி மந்துரங்குளிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 14 மணி நேரம் முன்

கணவன் உடலை டிரம்மில் வைத்து அடைத்த நிலையில்.., மணமக்களுக்கு பிளாஸ்டிக் டிரம் பரிசளித்த நண்பர்கள் News Lankasri

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri
