மலையக இளைஞர் ஒருவர் மட்டக்களப்பில் சடலமாக மீட்பு
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தனியார் விடுதி ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று(27) இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
டிக்கோயா, லோவர் டிவிசனைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞர், தனியார் விடுதி ஒன்றில் வாடகை அறையில் தங்கியிருந்து மட்டக்களப்பிலுள்ள தனியார் வங்கியில் தொழில் புரிந்து வந்ததாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவு
மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதவான் பீற்றர் போலின், உத்தரவிற்கமைவாக மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தினை பார்வையிட்டுள்ளார்.
மேலும் பிரேத பரிசோதனைக்கு பின்னர் சடலத்தினை நெருங்கிய உறவினர்களிடம் ஒப்படைக்கும் படி பொலிஸாருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 46 நிமிடங்கள் முன்

பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri
