புதிதாக திருமணமான இளைஞனின் விபரீத முடிவு - மனைவியும் உயிரை மாய்க்க முயற்சி
மொனராகல, புத்தல பகுதியை சேர்ந்த இளைஞர் தனது தந்தை தனது கால்நடைகளை விற்றதால் மனமுடைந்து உயிரை மாய்த்துள்ளார்.
புஹுல்கொட்டுவ பகுதியை சேர்ந்த 23 வயதான லஹிரு உதயங்க என்ற இளைஞனே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்துக் கொண்ட நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
உயிரை மாய்க்க முயற்சி
அவரது தந்தை கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளார், மேலும் அவரது மகன் கால்நடைகளை பராமரித்து வருகிறார்.

நான்கு எருமை மாடுகளை சில வாரங்களுக்கு முன்பு அவரது தந்தை மகனுக்கு தெரிவிக்காமல் விற்பனை செய்துள்ளார்.
அமெரிக்க பேரரசின் வீழ்ச்சிக்கான அறிகுறி! இனிமேலும் நீங்கள் அதை செய்ய முடியாது.. அலி கமெனியின் பகிரங்க எச்சரிக்கை
பொலிஸார் விசாரணை
இதனால் வருத்தமடைந்த இளைஞன், கடிதம் எழுதி, தனது வீட்டிற்கு அருகிலுள்ள நெல் வயலுக்கு அருகிலுள்ள மரத்தில் தூக்கில் தொங்கி உயிரை மாய்துள்ளார்.

சம்பவம் குறித்து அறிந்ததும், அவரது மனைவி விஷம் குடித்து மொனராகலை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
புத்தல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.
ராஷ்மிகா திருமணத்திற்கு யாரெல்லாம் வராங்க தெரியுமா! கெஸ்டுக்கு போடப்பட்ட முக்கிய கண்டிஷன் Cineulagam
கெத்தாக வீட்டிற்குள் வந்த ஜனனி, குணசேகரன் சொன்ன விஷயம்... எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam