யோஷித ராஜபக்சவின் கடற்படைச் சம்பளம்! வாக்குமூலம் வழங்கிய கடற்படை அதிகாரி - அம்பலமான உண்மைகள்
புதிய இணைப்பு
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்சவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சிய விசாரணையை எதிர்வரும் ஒக்டோபர் 30ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று (15) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேச ரணதுங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, வழக்குத் தொடுக்கும் தரப்பு சாட்சியாளர்களிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.
இதனையடுத்து, வழக்கின் மேலதிக சாட்சிய விசாரணையை எதிர்வரும் ஒக்டோபர் 30ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபக்ச, இலங்கை கடற்படையில் பணியாற்றிய காலப்பகுதியில் சம்பளமாக 5,150,626 ரூபாவைப் பெற்றுள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (15) தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்சவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்தத் தகவல் நீதிமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அம்பலமான உண்மைகள்
இதன்போது சாட்சியமளித்த கடற்படை அதிகாரி ஒருவர், யோஷித ராஜபக்ச கடற்படையில் சேவையாற்றிய காலப்பகுதியில் அவருக்கு சம்பளமாகக் குறித்த தொகை வழங்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்தத் தொகையில் மேலதிக கொடுப்பனவுகள் எதுவும் உள்ளடக்கப்படவில்லை என்றும் சாட்சியாளர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கின் விசாரணையின்போது கடற்படைச் சேவைக் காலத்தில் வழங்கப்பட்ட சம்பளம் தொடர்பான தகவல்கள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.
இரத்த ஆறான புனித பூமிகள்! காலம் கடந்து வெளிப்படுத்தப்பட்ட உண்மைகள் - சுட்டிக்காட்டும் ஐக்கிய மக்கள் சக்தி
you may like this..