யோஷிதவின் கைதில் அநுரவின் வகிபாகம்..! விளக்கமளித்த பொலிஸார்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச கைது செய்யப்பட்டதில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு(Anura Kumara Dissanayaka) எவ்வித தொடர்பும் கிடையாது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
யோஷித ராஜபக்சவின் கைது தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இன்று நீதிமன்றில்...
மோசடி குற்றச்சாட்டில் சிஐடியினரால் கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ச இன்றையதினம்(27) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
பெலியத்த பகுதியில் வைத்து நேற்று முன்தினம்(25) கைது செய்யப்பட்ட யோஷித, சுமார் 4 மணி நேர விசாரணைக்குப் பின்னர், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில, அவரை இன்று(27) வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்தநிலையில், யோஷித ராஜபக்ச கைது செய்யப்பட்டமை அநுர அரசின் திட்டமிட்ட பழிவாங்கல் என ராஜபக்சர்களுக்கு ஆதரவான மற்றும் ராஜபக்ச குடும்பத்தினர் ஆகியோர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.
எவ்வாறாயினும், யோஷித ராஜபக்சவின் கைதில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கோ அல்லது அல்லது பொது பாதுகாப்பு அமைச்சருக்கோ எவ்வித தொடர்பும் இல்லை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நேற்று அறிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்..
கைது செய்யப்பட்ட மகிந்தவின் மகன்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
பொலிஸாரின் மகிழ்ச்சியான வாடிக்கையாளர்! வைரலாகும் யோஷிதவின் புகைப்படம்
கைது செய்யப்பட்ட மகிந்தவின் மகனுக்கு விசேட சலுகை! தேடப்படும் புகைப்படத்தின் பின்னணி
வைரலான யோஷிதவின் புகைப்படம்! பொலிஸார் முக்கிய தகவல்
அடுத்த கைது நடவடிக்கைக்கு தயாராகும் அநுர தரப்பு
கைது செய்யப்பட்டுள்ள யோஷித தொடர்பில் சிறைச்சாலை ஆணையாளர் வெளியிட்ட தகவல்

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
