பொலிஸாரின் மகிழ்ச்சியான வாடிக்கையாளர்! வைரலாகும் யோஷிதவின் புகைப்படம்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்ச கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் தொடர்பிலான புகைப்படம் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
"இலங்கை பொலிஸாரின் மகிழ்ச்சியான வாடிக்கையாளர்" என குறிப்பிட்டு குறித்த புகைப்படம் வெளியாகியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்ச இன்று காலை கைது செய்யப்பட்டிருந்தார்.
யோஷித ராஜபக்ச
பெலியத்த பகுதியில் வைத்து இன்று(25) அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தரப்பு அறிவித்திருந்தது.
சட்டவிரோத சொத்து குவிப்பு தொடர்பில் யோஷித ராஜபக்ச கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸ் நிலையத்தில் மகிழ்ச்சியான மனநிலையில் அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் சமூக ஊடக கணக்குகளில் “கைது செய்யப்பட்ட பிற சந்தேக நபர்களுக்கும் இதே போன்ற வசதிகளை வழங்க வேண்டும் என்றும், கைதுக்குப் பிறகு போக்குவரத்துக்கு குளிரூட்டப்பட்ட வான்களைப் பயன்படுத்துமாறும், பல விடயங்கள் குறிப்பிட்டப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |