மகிந்தவுக்கு அடுத்த சவால்..! தன்னை குற்றமற்றவர் என நிரூபிக்க முயலும் யோஷித ராஜபக்ச
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபக்சவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டினை முன்னெடுத்துச் செல்ல முடியாது என பிரதிவாதி தரப்பால் முன்வைக்கப்பட்ட ஆரம்பக்கட்ட ஆட்சேபனை நிராகரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்று(14.05.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக உத்தரவிட்டுள்ளது.
இந்த தீர்ப்பை, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க வழங்கியுள்ளார்.
தான் குற்றவாளி அல்ல..
தீர்ப்பை அறிவித்த நீதிபதி, இந்த வழக்கில் பிரதிவாதிக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள 'சதித் திட்டம்' என்ற குற்றச்சாட்டினை முன்னெடுத்துச் செல்ல முடியாது என பிரதிவாதி தரப்பு முன்வைத்த ஆரம்பக்கட்ட ஆட்சேபனை அடிப்படையற்றது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, குறித்த ஆரம்பக்கட்ட ஆட்சேபனையை நிராகரிப்பதாகத் தெரிவித்த நீதிபதி, பிரதிவாதிக்கு எதிரான அந்த குற்றச்சாட்டினைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதில் எந்தவிதத் தடையுமில்லை என்றும் மன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, பிரதிவாதியான யோஷித ராஜபக்சவுக்கு பகிரங்க நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை வாசித்துக் காட்டப்பட்டது.
அப்போது, தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு தான் குற்றவாளி அல்ல என யோஷித ராஜபக்ச கூண்டில் இருந்தவாறே தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து குறித்த வழக்கு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam