மகிந்தவின் மகன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு!
தன்னை அரசியல் சூனிய வேட்டையில் சிக்க வைத்து,பொய்யான வழக்கில் சிக்க வைக்கும் முயற்சியில் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ச, குற்றம் சுமத்தியுள்ளார்.
யோஷித ராஜபக்ச, நேற்று காலை சிஐடியினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, வாக்குமூலம் அளித்த பின்னர், ஊடகம் ஒன்றிற்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில், இந்த விவகாரம் 2006 மற்றும் 2007 களுக்குள் இருந்தபோது நடந்தது.
விசாரணை
2023 ஆம் ஆண்டு, அந்த காணிக்கு அருகிலுள்ள கோவிலுக்கு சில உதவிகள் வழங்கியதாக நான் கூறினேன். எனக்கு அந்த காணி பற்றி தெரியவில்லை.
2017 ஆம் ஆண்டு புதிய அரசாங்கம் இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்தியபோது, எனது பெயர் இதில் தொடர்புடையதாக இல்லை.
தற்போது இந்த புதிய அரசாங்கம் என்னை அரசியல் இலாபங்களுக்காக பொய்யான வழக்கில் சிக்க வைக்க முயற்சிப்பதாக நான் உணர்கிறேன்.
மேலும், தன்னை வேறு பொய் வழக்குகளில் சிக்க வைக்க முயற்சித்ததாகவும், அந்த வழக்குகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.