கோட்டாபயவை விட அதிகமாக செலவழித்துள்ள அநுர தரப்பு! நாடாளுமன்ற முதல் நாள் விபரம்
புதிய அரசாங்கம் நாடாளுமன்றின் முதல் அமர்வுகளின் போது தேனீர் விருந்துபசாரத்திற்காக செலவிடப்பட்ட தொகை தொடர்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு நடத்தப்பட்ட நாடாளுமன்ற தேனீர் விருந்துபசார நிகழ்விற்கான செலவை விடவும் கடந்த ஆண்டில் நடத்தப்பட்ட தேனீர் விருந்துபசாரத்திற்கான செலவு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் இலங்கையின் நாடாளுமன்றம் விளக்கமளித்துள்ளது. பத்தாவது நாடாளுமன்றின் முதலாவது அமர்வின் போது தேனீர் விருந்துபசாரம் ஒன்று வழங்கப்பட்டிருந்தது.
விளக்கம்
பொதுவாக தேநீர் விருந்துபசாரம் ஒன்று இவ்வாறான முதல் அமர்வுகளின் போது வழங்கப்படுவது வழமையானதாகும்.
இந்த தேநீர் விருந்துபசாரம் தொடர்பில் நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவின் பிரதிப்பணிப்பாளர் எம்.ஜயலத் பெரேரா விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த 2020ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 20ஆம் திகதி ஒன்பதாவது நாடாளுமன்றின் முதல் அமர்வில் தேநீர் விருந்துபசாரத்திற்காக 287,340 ரூபா செலவிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் திகதி பத்தாவது நாடாளுமன்றின் முதல் அமர்வின் நிறைவில் நடத்தப்பட்ட தேநீர் விருந்துபசாரத்தில் 339,628 ரூபா செலவிடப்பட்டுள்ளது.
பணவீக்கம்
2020 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் தேநீர் விருந்துபசாரத்திற்கான செலவு அதிகரிப்பானது சந்தை விலை மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டது என நாடாளுமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
பணவீக்கம் மற்றும் பொருளாதார சவால்கள் காரணமாக இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. பணவீக்கம் பொருளாதார நிலைமைகள் காரணமாக பொருட்களின் விலைகள் கணிசமான அளவு அதிகரித்துள்ளது.
இதனால் 2020ஆம் ஆண்டிற்கும் 2024ஆம் ஆண்டிற்கும் இடையில் செலவுகள் 100 வீதம் அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள், விருந்தினர்கள், நாடாளுமன்ற பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்காக இந்த விருந்துபசாரத்தின் போது செலவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
You may like this,
ரணில் அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர் செய்த மிகப்பெரிய மோசடி! அதிரடி நடவடிக்கைகளுக்கு தயாராகும் அநுர அரசு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |