க்ளீன் ஶ்ரீ லங்கா செயற்திட்டத்தின் எதிரொலி! பேருந்து சாரதிக்கு அனுமதிப்பத்திரம் இரத்து
'க்ளீன் ஶ்ரீ லங்கா' செயற்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பயணிகளை நடுவழியில் இறக்கி விட்டுச் சென்ற பேருந்தின் வழித்தட அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
பாணந்துறை பிரதேசத்தில் போக்குரவத்து விதிமுறைகளை மீறியதாக குற்றம் சுமத்தப்பட்ட தனியார் பேருந்து ஒன்றுக்கு நேற்றையதினம்(06.01.2025) போக்குவரத்து பொலிஸாரினால் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.
பேருந்து ஓட்டுநர் மேற்கொண்டதாக கூறப்படும் விதிமுறை மீறல் தொடர்பில் அவருக்கு விளக்கமளிக்கப்பட்டு, அவருக்கான அபராத சீட்டும் கையளிக்கப்பட்டுள்ளது.
எனினும் இதனை ஏற்றுக்கொள்ளாத ஓட்டுநர், பொலிஸாரின் நடவடிக்கை நியாயமற்றது என்று கூறி பயணிகளை பேருந்திலிருந்து இறங்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
விசாரணை
அதன் பின்னர், பயணிகள் இன்றி தமது பேருந்தை மீண்டும் தாம் புறப்பட்ட இடத்துக்கே ஓட்டிச்சென்றுள்ளார்.
குறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய பேருந்தின் வழித்தட அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்பட்டுள்ளது.
குறித்த பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனரும் பயணிகள் போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |