யாழில் மீண்டும் சோதனைச்சாவடி : மக்கள் மத்தியில் அச்சம்
யாழ்ப்பாணத்தில் (Jaffna) நீண்டகாலமாக இருந்து அகற்றப்பட்ட சோதனைச் சாவடிகள் மீண்டும் திடீரென அமைக்கப்பட்டு வருகின்றமை பொதுமக்கள் மத்தியில் சந்தேகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
போரின் போதும் போர் முடிவுற்ற பின்னரும் கூட பல்வேறு இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்தச் சோதனைச் சாவடிகளை அகற்றுமாறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும், பொதுமக்களும் நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்து வந்திருந்தனர்.
பொதுமக்கள் மத்தியில் சந்தேகம்
இந்நிலையில் நாட்டில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்துக்கு வந்து சென்ற பின்னர் இங்கு இருந்த சோதனைச் சாவடிகள் அனைத்தும் உடனடியாக அகற்றப்பட்டன.
எனினும், அந்தச் சோதனைச் சாவடிகள் தற்போது மீண்டும் அதே இடங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன.
மாற்றம் என்று கூறி புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள அநுர அரசு சோதனைச் சாவடிகளைத் தாமே அகற்றுவதும் மீண்டும் தாமே அமைப்பதுமான இந்த நடவடிக்கை தொடர்பில் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அரசின் இந்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் சந்தேகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, நீண்ட காலமாகப் பருத்தித்துறையில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ முகாமை அகற்றுவதாக அநுர அரசு உறுதியளித்திருந்த போதிலும் இதுவரையில் அது அகற்றப்படாமலே இருக்கின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

இன்று நள்ளிரவு முதல் போர்நிறுத்தம் அமுல்! நிபந்தனையின்றி ஒப்புக்கொண்ட தாய்லாந்து, கம்போடியா News Lankasri

இனி 12 மணி நேரத்திற்கு பதில் 2 மணி நேரம் தான்.., ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில் இந்தியாவில் அறிமுகம் News Lankasri
