ரணில் அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர் செய்த மிகப்பெரிய மோசடி! அதிரடி நடவடிக்கைகளுக்கு தயாராகும் அநுர அரசு
முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ(Harin Fernando) 320 மில்லியன் ரூபா தொகையை முறைகேடாக செலவு செய்தமை தொடர்பிலான விசாரணைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என இளைஞர் விவகார பிரதியமைச்சர் எரங்க குணசேகர(Eranga Gunasekara) தெரிவித்துள்ளார்.
தணிக்கை அறிக்கையின் கண்டுபிடிப்புகள் குறித்து முறையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், 320 மில்லியன் ரூபா தொகையானது, ஹரின் பெர்னாண்டோ அமைச்சராக இருந்த காலத்தில் எவ்வாறு முறைகேடாக செலவுசெய்யப்பட்டது என்ற தகவல்களை தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இசை நிகழ்வு
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடத்தப்பட்ட இசை நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்கு இந்த தொகை செலவு செய்யப்பட்டதாக முன்னதாக தெரியவந்தது.
அப்போதைய விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் நிர்வாகத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட செலவுகள் தொடர்பில் வெளியாகிய கணக்காய்வு அறிக்கையின்படி, செலவழிக்கப்பட்ட மொத்தத் தொகை 320,339,323 என கூறப்பட்டுள்ளது.
மஹரகம, காலி, அம்பாறை, குளியாப்பிட்டிய, புத்தளம், தம்புள்ளை, யாழ்ப்பாணம், மஹியங்கனை, ஹட்டன், ஹிங்குராங்கொட, பண்டாரவளை, வெலிசறை, கொழும்பு ரேஸ்கோர்ஸ், கேதாராம மைதானம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதன்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களுக்கான செலவு விவரங்கள் பின்வருமாறு கணக்கிடப்பட்டுள்ளது.
செலவு விவரங்கள்
“மஹியங்கனை பொது விளையாட்டு மைதானம் (பதுளை மாவட்டம்): 64,986,789 ரூபாய்.
பண்டாரவளை நகரசபை மைதானம்: 20,179,185 ரூபாய்
மஹரகம இளைஞர் சேவைகள் மன்றம்: 16,667,851 ரூபாய்
சமணலா மைதானம் (காலி): 31,417,778 ரூபாய்
வீரசிங்க விளையாட்டரங்கம் (அம்பாறை): 9,491,477 ரூபாய்
குளியாபிட்டிய தொழில்நுட்பக் கல்லூரி மைதானம்: 68,105,908ரூபாய்
புத்தளம் கடற்கரை மைதானம்: 14,834,651 ரூபாய்
தம்புள்ளை: 15,289,150 ரூபாய்
முற்றவெளி மைதானம் (யாழ்ப்பாணம்): 39,037,339 ரூபாய்
ஹட்டன் டன்பார் மைதானம்: 234,592 ரூபாய்
ஹிங்குராக்கொட டட்லி சேனாநாயக்க மைதானம்: 14,830,835 ரூபாய்
கேத்தாராம மைதானம் (கொழும்பு): 13,685,800 ரூபாய்
கொழும்பு ரேஸ்கோர்ஸ்: 14,571,192 ரூபாய்
வெலிசர மைதானம்: 60,700 ரூபாய்” என கூறப்பட்டுள்ளது.
தணிக்கை அறிக்கை
எனினும் இந்த செலவு விபரங்களில் முரண்பாடுகள் காணப்படுவதாகவும் அரசாங்கத்தான் சில உயர்மட்ட தரப்புக்களின் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
மேலும், இது தொடர்பான தணிக்கை அறிக்கை, அனைத்து ஆவணங்களுடன், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் செயலாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam

மகாநதியை தொடர்ந்து விஜய் டிவியில் மாற்றப்படும் 2 சீரியல்களின் நேரம்.. எந்தெந்த தொடர் தெரியுமா? Cineulagam

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan
