சி.ஐ.டி விசாரணைக்கு தயாராகும் அடுத்த முன்னாள் அமைச்சர்!
நிதி மோசடி தொடர்பில் முன்னாள் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடம் வாக்குமூலம் பெறப்பட உள்ளதாக விசாரணை குழுக்கள் தெரிவிக்கின்றன.
குறித்த நிதி மோசடி, வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்கும் போது இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது.
விசாரணை
இந்நிலையில் எதிர்கால விசாரணைகளில் வெளிவரும் தகவல்களின் அடிப்படையில் இது தொடர்பான வாக்குமூலம் பெறப்படும் என விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸ் நிலைய சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நிதி மோசடி தொடர்பான முறைப்பாடுகள், குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்குத் தொடர்ந்தும் கிடைக்கப்பெறுவதுடன் அது தொடர்பான சாட்சியங்களும் பெறப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனூடாக கிடைக்கப்பெறும் தகவல்களின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என விசாரணைக் குழுக்கள் குறிப்பிட்டுள்ளன.
நிதி மோசடி சம்பவம்
இதேவேளை நிதி மோசடி சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் திசர நாணயக்கார இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பின்லாந்தில் வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதாகக் கூறி 30 இலட்சம் ரூபாவினை பெற்று மோசடி செய்தமை தொடர்பில் கம்பஹா பகுதியைச் சேர்ந்த ஒருவர் திசர நாணயக்காரவுக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தார்.
குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் திகதி பிபிலை பகுதியில் வைத்துக் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் அவரைக் கைது செய்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 11 மணி நேரம் முன்
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan