இலங்கையின் மூத்த தமிழ் படைப்பாளர் யோகேந்திரநாதன் இன்று காலமானார்

Jaffna Sri Lanka Northern Province of Sri Lanka
By Rakesh Dec 29, 2024 07:07 PM GMT
Report

அறுபது ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையின் தமிழ் இலக்கிய உலகில் பிரகாசித்த மூத்த படைப்பாளர் நா.யோகேந்திரநாதன் காலமானார்.

யாழ்ப்பாணம், வடமராட்சி, கரணவாயைப் பிறப்பிடமாகக் கொண்ட யோகேந்திரநாதன் தனது 80ஆவது வயதில் நேற்று(29.12.2024) காலமானார்.

1960களில் சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களில் நேரடியாக அவர் பங்கெடுத்துள்ளார்.

அநுரவின் ஆட்சியில் இலக்கு வைக்கப்படுகிறார்களா தமிழர்கள்!

அநுரவின் ஆட்சியில் இலக்கு வைக்கப்படுகிறார்களா தமிழர்கள்!

  

எழுத்துலகில் பிரகாசித்த யோகேந்திரநாதன்

யாழ்ப்பாணம், வடமராட்சி, கரணவாயைப் பிறப்பிடமாகக் கொண்ட நா.யோகேந்திரநாதன் கிளிநொச்சி - திருவையாறு தபாலகத்தின் உதவித் தபால் அதிபராகப் பணியாற்றியிருந்தார்.

1960களில் நிலம் புலம் சார்ந்து எழுத்தின் மூலம் ஈழ உலகை வடிவமைக்கும் இலக்கியத் துறைக்குள் அவர் பிரவேசித்தார். இலங்கை வானொலியில் நாடக எழுத்தாளராகப் பணியாற்றிய அவர், போர்க்காலத்தில் வானொலியில் நாடக எழுத்தாளராகவும் தயாரிப்பாளராகவும் கடமையாற்றினார்.

உயிர்த்தெழுகை, உயிர் குடிக்கும் பறவைகள், சாம்பல் பறவைகள், காவல் வேலி போன்ற நாடகத் தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. கண்ணீர் மழலைகள், விடுதலை முழக்கம் உட்பட பல தொடர் நவீனங்களை எழுதிய அவர் பல நூற்றுக்கணக்கான சிறுகதைகளையும் படைத்துள்ளார்.

இலங்கையின் மூத்த தமிழ் படைப்பாளர் யோகேந்திரநாதன் இன்று காலமானார் | Yogendranathan Passed Away Today  

போர்க் காலத்தில் பல வீதி நாடகங்களையும் உருவாக்கியிருந்தார். 1993இல் ஈழநாதம் நாளிதழ், வன்னிப் பிராந்தியத்துக்கான பதிப்பைத் தொடங்கியபோது 1995 வரை அதன் ஆசிரியராகவும், யாழ்ப்பாணத்தில் வெளிவந்த 'புதுவிதி' வார இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

யாழ்ப்பாணத்தில் வெளிவரும் பத்திரிகைகளில் சந்திரசேகர ஆசாத், யோகநாராயணன், விஷ்ணுபுத்திரன், அக்கினீஸ்வரன் என்ற புனைபெயர்களிலும் நா.யோகேந்திரநாதன் என்ற இயற்பெயரிலும் அரசியல் கட்டுரைகளை அவர் எழுதினார். சமூக ஒடுக்குமுறையை வெளிப்படுத்தும் விதமாக இடிபடும் இரும்புக் கோட்டைகள் என்ற நாவலையும் அவர் படைத்திருந்தார்.

அவர் எழுதிய 3 நாவல்கள் தேசிய ரீதியில் விருதுகளை வென்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் இலங்கை வானொலியில் ஒலிப்பரப்பான காட்டு நிலா என்ற வானொலி நாடகம் நூலாக வெளியாகியிருந்தது.

இறுதிக்கிரியைகள் 

இலங்கையில் இடம்பெற்ற போரை ஆவணமாக்கும் பெருமுயற்சியில் அளப்பரிய பங்காற்றிய அவர், போராட்ட வரலாற்றை மையமாகக் கொண்டு நீந்திக் கடந்த நெருப்பாறு, (முள்ளிக்குளத்திலிருந்து கிளிநொச்சி வரை), நீந்திக் கடந்த நெருப்பாறு (கிளிநொச்சியிலிருந்து புதுமாத்தளன் வரை), மரண மழையில் நீந்திக் கடந்த நெருப்பாறு போன்ற நாவல்களைப் படைத்திருந்தார்.

கடும் சுகயீனத்தால் பாதிக்கப்பட்டிருந்த வேளையிலும் ஆனையிறவை வெற்றிகொண்ட வரலாற்றை வெளிப்படுத்தும் விதமாக 39 நாட்களில் நீந்திக் கடந்த நெருப்பாறு என்ற நாவலை அண்மையில் வெளியிட்டிருந்தார். யோகேந்திரநாதன் படைப்புத்துறை தவிர்த்து கூத்துக் கலைஞராக, அரங்க நாடக நடிகராக, வீதி நாடகத் தயாரிப்பாளராக, வானொலி நாடக தயாரிப்பாளராக, குரல் வழங்குநராக, சிறந்த விமர்சகராக, பேச்சாளராக எனப் பல்துறை ஆளுமையாளராக மிளிர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இடது சாரிக் கொள்கையை மாறாத பற்றுடன் தன் வாழ்நாள் முழுவதும் பின்பற்றிய அவர், சமூக அடக்குமுறைகளுக்கு எதிராக அளப்பரிய பங்காற்றினார். இதனால் பல்வேறு இன்னல்களுக்கும் அவர் முகம் கொடுத்திருந்தார். தனது கனதியான படைப்புகள் மூலம் தமிழ்த் தேசிய எழுச்சிக்கு வலுச் சேர்த்த அவர், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனால் மதிப்பளிக்கப்பட்டார்.

இலங்கையின் மூத்த தமிழ் படைப்பாளர் யோகேந்திரநாதன் இன்று காலமானார் | Yogendranathan Passed Away Today

யாழ். ஊடக அமையம் தமிழ்த் தேசியத்தின் அர்ப்பணிப்பு மிக்க ஆளுமைகளை வாழ்நாளில் கௌரவிக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் அவரின் ஊடக பணிக்காக விருது வழங்கிக் கெளரவித்தமை குறிப்பிடத்தக்கது.

யோகேந்திரநாதனின் பூதவுடல் நீர்வேலியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று திங்கட்கிழமை காலை 10 மணியளவில் நீர்வேலியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும். 

யாழில் அரச வங்கி ஒன்றின் முன்னாள் முகாமையாளர் கைது

யாழில் அரச வங்கி ஒன்றின் முன்னாள் முகாமையாளர் கைது

எமது அரசாங்கம் எந்த அரசியல் பழிவாங்கலையும் முன்னெடுக்காது! அருண் திட்டவட்டம்

எமது அரசாங்கம் எந்த அரசியல் பழிவாங்கலையும் முன்னெடுக்காது! அருண் திட்டவட்டம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US