யேமனின் இராணுவ நடவடிக்கை: ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹுதி கிளர்ச்சியாளர்கள் பலி
யேமனின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசின் இராணுவம் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையில் இதுவரை 1,860 ஹுதி போராளிகள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேவேளையில், சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்திற்கு வடக்கே அமைந்துள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து இன்று காலை பெலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஹுதி அமைப்பு அறிவித்துள்ளது.
யேமன் அரசப் படைகள் மேற்கொண்ட 2,103 துல்லியமான தாக்குதல்களில் ஹ_தி கிளர்ச்சியாளர்களின் பல தளங்கள், இராணுவ உபகரணங்கள் மற்றும் விநியோகப் பாதைகள் அழிக்கப்பட்டதாக அந்த நாட்டின் இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தீவிர இராணுவ நடவடிக்கை
தலைநகர் சனாவை மீட்கும் நோக்கிலும், நாட்டின் முக்கிய பகுதிகளை ஹுதிகளின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கும் நோக்கிலும் இந்த தீவிர இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

யேமன் அரசுப் படைகளுக்கும் ஹுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான மோதல் புதிய உச்சத்தை எட்டியுள்ள நிலையில், இரு தரப்பிலும் பரஸ்பர தாக்குதல்கள் தீவிரமடைந்து வருகின்றன.
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri