நாடாளுமன்றத்தில் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் சாக்கு பை நூல்
நாடாளுமன்றத்தில் ஊடகவியலாளர்களுக்கு இன்று மதியம் சோறுடன் வழங்கப்பட்ட நெத்திலி பொறியலில் சுமார் ஒரு அடி நீளாமான சாக்கு பை நூல் கிடந்துள்ளது.
உணவில் சாக்கு பை நூல்
ஊடகவியலாளர் ஒருவர் உணவை உண்ணும் போது அவருக்கு இந்த சாக்கு பை நூல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து அவர் நாடாளுமன்ற உணவகத்தின் பிரதான அதிகாரியிடம் இது சம்பந்தமாக முறைப்பாடு செய்துள்ளதுடன் உணவில் கிடந்த நூலை அவரிடம் வழங்கியுள்ளார். நெத்திலி பொறியலில் சாக்கு பை நூல் கிடந்ததை அடுத்து சில ஊடகவியலாளர்கள் உணவு உட்கொள்வதை தவிர்த்துக்கொண்டுள்ளனர்.
அதேவேளை நாடாளுமன்ற உணவகத்தில் நேற்று ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்ட இரண்டு வகையான மதிய உணவில் வெங்காய சுவை இருந்ததாக ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற உணவகத்தில் இதற்கு முன்னர் வழங்கப்பட்ட உணவுகளில் புழுக்கள், பிளாஸ்டிக் துண்டுகள், நைலோன் நூல் துண்டுகள் அவ்வப்போது கிடைத்துள்ளன.
மீன் கறி விஷமானதில் இரண்டு பொலிஸார் வைத்தியசாலையில்
அதேவேளை நாடாளுமன்ற உணவகத்தில் நேற்று வழங்கப்பட்ட மீன் கறி விஷமானதில் கடுமையான சுகவீனத்திற்கு உள்ளான இரண்டு பொலிஸ் அதிகாரிகள் நாராஹென்பிடி பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற மருத்துவப் பிரிவில் ஆரம்ப சிகிச்சைகள் வழங்கப்பட்ட பின்னர், அவர்கள் அம்பியூலன்ஸ் வண்டியில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சம்பவம் தொடர்பாக நாடாளுமன்ற செயலாளர் தம்மிக்க தசநாயக்கவின் உத்தரவின் பேரில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது.