நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நாட்டுப்புற உணவுகள்! ஜனாதிபதி பணிப்புரை
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நாட்டுப்புற உணவுகளை வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஜனாதிபதி இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.
பாதுகாப்பான வனப் பிரதேசங்களில் அதிகமாக காணப்படும் பலாக்காய் போன்றவற்றை பறிப்பதற்காக, குறித்த வனங்களுக்குள் நுழைவதற்கு பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்ற யோசனை அமைச்சர் மஹிந்த அமரவீரவால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பலாக்காய் உணவு
அதன் போது கருத்து வௌியிட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பலாக்காய், ஈரப்பலா, வற்றாளைக் கிழங்கு என்பவற்றை வழங்குமாறு தெரிவித்துள்ளார்.
அதன் பிரகாரம் நாடாளுமன்றம் கூடும் நாட்களில் நாட்டுப்புற உணவு வகைகளும் நாடாளுமன்ற உணவகம் மூலமாக வழங்கப்படுவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam
