இலங்கைக்கு கிடைத்துள்ள பல கோடி ரூபா! வரலாறு காணாத மாற்றம்
தேசிய பூங்காக்களுக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவு மாற்றமடைந்துள்ளதுடன் அதனூடாக கடந்த மூன்று மாதங்களில் 200 கோடி ரூபாவுக்கும் அதிகமான வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளது.
இந்த வருடத்தின் கடந்த சில மாதங்களில், நாட்டின் தேசிய பூங்காக்களை பார்வையிட வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய யால தேசிய பூங்காவை(Yala National Park) பார்வையிட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 100,000இற்கும் அதிகமானவர்கள் வந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
தேசிய பூங்காக்களுக்கு வருகை
ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தேசிய பூங்காக்களுக்கு வருகை தந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை வஸ்கமுவ, குமண, வில்பத்து, புந்தல, உடவலவ, மின்னேரிய, கவுடுல்ல போன்ற தேசிய பூங்காக்களுக்கு அதிகளவான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் மூலம் கடந்த மூன்று மாதங்களில் 200 கோடி ரூபாவுக்கும் அதிகமான வருமானம் கிடைக்க பெற்றுள்ளது.
மேலும், கடந்த வருடத்தை விட இந்த வருடம் தேசிய பூங்காக்கள் மூலம் பெறக் கூடிய வருமானம் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உண்மையை மறைத்த கோமதி-மீனாவிற்கு, பாண்டியன் செந்தில் கொடுத்த தண்டனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
நிலா என் ஆளு, பத்திரமா கூட்டிட்டு போ, சோழனிடம் கூறிய ராகவ், அடுத்து நடந்தது?... அய்யனார் துணை சீரியல் Cineulagam