எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் இழப்பீடு வழங்கல் தொடர்பில் வெளியான தகவல்
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர்களுக்கு ரூபா. 2980.5 மில்லியன் அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று (05.01.2026) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மீனவ சமூகத்திற்கான இழப்பீட்டின் முதல் கட்டத்தின் கீழ், 56.90 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கோரப்பட்டிருந்தன.
பாதிக்கப்பட்டுள்ள தரப்பு
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில், சட்டமா அதிபர் திணைக்களம் கப்பலின் காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து 2.28 மில்லியன் அமெரிக்க டொலர்களை மீண்டும் கோரியுள்ளதாக அமைச்சர் கூறினார்.
கப்பல் தீப்பிடித்ததால் மீன்பிடி தொழிலுக்கு விதிக்கப்பட்ட தடையால் பல தரப்பினர் பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் மீன்பிடித் தொழிலில் நேரடியாக ஈடுபட்டுள்ள 23 பிரிவினரும் மறைமுகமாக பாதிக்கப்பட்ட 23 பிரிவினர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் நீர்கொழும்பு களப்பில் மீன்பிடி உபகரணங்களுக்கு ஏற்பட்ட சேதம் மற்றும் நீர்வாழ் உயிரின விவசாயிகளுக்கு ஏற்பட்ட சேதம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை முற்றாக நீக்கப்பட வேண்டும் - ஜயம்பதி விக்கிரமரத்ன வலியுறுத்தல்
வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம் News Lankasri