இலங்கை அணி கிரிக்கெட் வீரர்களை அவசரமாக சந்தித்த ஜனாதிபதி
ஆண்கள் டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக வீரர்களின் மன உறுதியை உயர்த்தும் நோக்கில், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க இலங்கை கிரிக்கெட் அணியை சந்தித்தார்.
கொழும்பு என்.சீ.சீ மைதானத்தில் நடைபெற்ற பயிற்சி நிறைவடைந்த பின்னர் அவர் அணியை நேரில் சந்தித்து உரையாடினார்.
அண்மைக் கால தோல்விகள் மற்றும் ரசிகர்களின் தொடர்ச்சியான விமர்சனங்கள் காரணமாக அழுத்தமான சூழ்நிலையில் இலங்கை அணி உள்ள நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
தேசிய கிரிக்கட் அணி
இந்த பின்னணியில், இலங்கை தேசிய கிரிக்கட் அணியின் வீரர்களை நேரடியாக சந்தித்து ஜனாதிபதி பேசியுள்ளார்.

அணி வீரர்களுக்கு ஊக்கம் அளித்து, நம்பிக்கை தரும் வார்த்தைகளை தெரிவித்தார்.
இலங்கை அணி தங்களின் முதல் போட்டியை எதிர்வரும் 8ஆம் திகதி விளையாட உள்ள நிலையில், இந்த சந்திப்பு வீரர்களின் மனநிலையை உற்சாகப்படுத்தும் முயற்சியாகக் கருதப்படுகிறது.
உள்நாட்டு மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணி சிறப்பாக செயல்படும் என்ற நம்பிக்கையையும் ஜனாதிபதி வெளியிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.