எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல்: நஷ்ட ஈடு கோரி சிங்கப்பூர் நீதிமன்றில் வழக்கு தாக்கல்
இலங்கைக் கடலில் ஏற்பட்ட எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் அனர்த்தத்துக்கு இழப்பீடு கோரி சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கையின் சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் உள்ள ஒரு சட்ட நிறுவனம் மூலம் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இழப்பீடு தொகை
இந்தநிலையில் ஏற்பட்ட இழப்பீடு தொகை குறித்து எதிர்காலத்தில் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்படும் என சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்ணம் தெரிவித்துள்ளார்.
நட்டஈடு கோருவதற்கு கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபையிடம் இருந்து விரிவான அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

நிபுணர்களின் கருத்து
2021,மே 20ஆம் திகதியன்று கொழும்பில் கடலில் தீப்பிடித்து மூழ்கத் தொடங்கியபோது எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் ஆயிரத்து 486 கொள்கலன்கள் இருந்தன. இதில் 25 மெட்ரிக் தொன் நைட்ரிக் அமிலமும் இருந்தது.
இந்த அனர்த்தம் காரணமாக இலங்கைக் கடலில் ஏராளமான கடல்வாழ் உயிரினங்கள்
பாதிக்கப்பட்டதுடன், ஏராளமான கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழந்தன.
இலங்கைக் கடலில் கடல் சூழலுக்கு ஏற்படும் சேதம் பல நூற்றாண்டுகளாக பாதிப்பை
ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 4 மணி நேரம் முன்
குறைந்த விலையில் கிடைக்கும் இந்த மீனை கட்டாயம் சாப்பிடுங்க.... முடி வளர்ச்சி முதல் இதய நோய் வரை தீர்வு Manithan
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam