மனைவி வெளிநாட்டில்: கணவர் எடுத்த தவறான முடிவு
திருகோணமலை - குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட நாவற்சோலை பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் நபரொருவர் நேற்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பாலசுப்பிரமணியம் பிரதீபன் (36 வயது) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்டவரின் மனைவியான வசந்தி என்பவர், மத்திய கிழக்கு நாட்டிற்கு வேலைக்காக சென்று மூன்று மாதங்களான நிலையில், அவர் வேளைக்காக தரித்திருந்த வீட்டை விட்டு வெளியே சென்று தூதரக தடுப்பில் இருக்கின்றார்.
மனைவியின் கஷ்ட நிலமை
இந்த நிலையில் மனைவியின் கஷ்ட நிலமை குறித்து கவலைப்பட்ட கணவர் மது அருந்துவிட்டு தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரேத பரிசோதனை
உயிரிழந்தவரின் சடலம் குச்சவெளி பொலிஸாரினால் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
திருகோணமலை பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை மேற்கொண்ட பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும், மரணம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



