வட மாகாணத்தில் நடாத்தப்பட்ட மல்யுத்த போட்டி
வட மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் யாழ்.மந்திகையில் நடத்தப்பட்ட மாகாண மல்யுத்த போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் தொடர்ந்து 5ஆவது தடவையாக 1ஆம் இடத்தை பெற்றுக்கொண்டனர்.
வடமாகாண விளையாட்டு திணைக்களத்தால் கடந்த 27ஆம் திகதி யாழ்.மந்திகையில் நடாத்தப்பட்ட வடமாகாணத்திற்கான திறந்தமட்ட மல்யுத்த (wrestling) போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் முதலிடம் பெற்றுள்ளனர்.
தொடர்ந்து ஐந்து வருடங்களாக மாகாண மட்ட திறந்த மல்யுத்த (wrestling) போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்தவர்களே முதலிடம் பெற்று வருகின்றனர்.
வெற்றி பதக்கங்கள்
மேலும், இப் போட்டியில் 1ஆம் இடம் பெற்ற முல்லைத்தீவு ஆண்கள் அணி, 6 தங்கம், 6 வெள்ளி மற்றும் 3 வெண்கலம் ஆகிய பதக்கங்களை பெற்றது.
அதேநேரம், 2ஆம் இடம் பெற்ற யாழ் . மாவட்ட அணி, 2 தங்கம், 2 வெண்கலம் மற்றும் 4 வெள்ளி ஆகிய பதக்கங்களையும் 3ஆம் இடம் பெற்ற வவுனியா மாவட்ட அணி, 1தங்கம்,1வெள்ளி மற்றும் வெண்கலம் ஆகிய பதக்கங்களையும் பெற்றன.
மேலும், மன்னார் அணி 1 தங்க பதக்கத்தினையும், பெண்கள் அணி 10 தங்கம் 8 வெண்கலப் பதக்கங்களையும் பெற்று முதல் இடத்தை தமதாக்கினர்.
முல்லைத்தீவு மாவட்ட அணி வீரர்களாக உடையார்கட்டு, வள்ளிபுனம், தீர்த்தகரை, மாஞ்சோலை, குமுழமுனை, சிலாவத்தை, கொக்குதொடுவாய், தண்ணீரூற்று, முள்ளியவளை, மாமூலை, தண்டுவான், பழம்பாசி, மாங்குளம், பாலிநகர் ஆகிய பிரதேச வீர வீராங்கனைகள் மேற்படி மல்யுத்த போட்டியில் பங்குகொண்டு முல்லைத்தீவு மாவட்டத்தின் வெற்றிக்காக பங்காற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |