உக்ரைனை எச்சரிக்கும் அமெரிக்கா: ரஷ்யாவின் அடுத்த கட்ட நகர்வு
அடுத்த சில நாட்களில் ஓர்ஷ்னிக் (Oreshnik) என்ற அதிவேக ஏவுகணையை பயன்படுத்தி உக்ரைன் (Ukraine) மீது ரஷ்யா (Russia) மீண்டும் தாக்குதல் நடத்தும் வாய்ப்பு உள்ளது என அமெரிக்க (US) அதிகாரி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த நவம்பர் 21ஆம் திகதி அன்று, உக்ரைனின் ட்னிப்ரோ நகரில் ஓர்ஷ்னிக் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலானது, அதனை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், உக்ரைன் மேற்கத்திய ஆதரவு பெற்ற ஏவுகணைகளை ரஷ்யாவில் பயன்படுத்தியதற்கான பதிலடி எனக் கூறினார்.
ஓர்ஷ்னிக் ஏவுகணை
அதிவேகமான இந்த ஓர்ஷ்னிக் ஏவுகணையை தடுத்து நிறுத்த முடியாது என்று புடின் கூறியிருந்தார். அத்துடன், குறித்த ஏவுகணை அணுகுண்டு அளவிலான பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், ஓர்ஷ்னிக் என்ற ஏவுகணை பல குண்டுகளை (WarHeads) கொண்டிருப்பதால், ஒரே நேரத்தில் பல இலக்குகளை குறி வைத்து தாக்குதல் நடத்த உதவும் சிறப்பு தன்மை அதற்கு உள்ளதாக மேற்கத்திய நிபுணர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும், அமெரிக்க அதிகாரி, இந்த தகவல்களை ரஷ்யாவின் வெறும் சோதனை முயற்சியே தவிர வேறு ஒன்றுமல்ல என்று மறுத்துள்ளார். மேலும், ரஷ்யாவிடம் இந்த ஏவுகணைகள் குறைவாகவே உள்ளன என்றும், இதன் தாக்குதலின் திறன் குறைவாகவே இருக்கும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கு மத்தியில், அமெரிக்கா உக்ரைனுக்கு மேலும் பல விமான பாதுகாப்பு சாதனங்களை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் குறிப்பிடுகின்றன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam