வெளிநாட்டு தம்பதியினருக்கு இலங்கையர் ஒருவர் செய்த மோசமான செயல்
கண்டி புகையிரத நிலையத்தில் வெளிநாட்டு தம்பதியருக்கு அதிக விலைக்கு புகையிரத பயணச்சீட்டை விற்பனை செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கண்டி பிரதேசத்தை சேர்ந்த 64 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேகநபர் 2600 ரூபா பயணச்சீட்டை 7600 ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பயணச்சீட்டு விற்பனை
சந்தேகநபர் இந்த பயணச்சீட்டை விற்பனை செய்து கொண்டிருந்த போது, புகையிரத நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கண்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், முன்பதிவு செய்யப்பட்ட மற்றுமொரு ரயில் பயணச்சீட்டும் சந்தேகநபரிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam
நடிகை குஷ்புவா இது.. 20 வயதில் அடையாளம் தெரியாத அளவுக்கு எப்படி இருந்திருக்கிறார் பாருங்க! Cineulagam