இலங்கை வந்த வெளிநாட்டவர்களின் மோசமான செயல்! ஹோட்டல் பெண் ஊழியருக்கு நேர்ந்த துயரம்
கொழும்பில் பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவரை போலாந்தினை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று நீச்சல் குளத்திற்குள் தள்ளியதால் அவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த சுற்றுலாப் பயணிகள் குழு மதுபோதையில் இதனை செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மதுபோதையில் நீச்சல் குளத்தில் இருந்த சுற்றுலா பயணிகளை, ஹோட்டலின் நிர்வாக மக்கள் தொடர்பு அலுவலராக பணிபுரியும் குறித்த பெண் அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
பொலிஸில் முறைப்பாடு
எனினும், அதனை செவிமடுக்காத குழுவினர், அவரை நீச்சல் குளத்திற்குள் தள்ளியுள்ளனர். இவ்வாறு நீச்சல் குளத்திற்குள் தள்ளப்பட்டதால் குறித்த பெண் ஊழியருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதோடு மூச்சு திணறலும் ஏற்பட்டுள்ளது.
அதனையடுத்து, அவர் சிகிச்சைக்காக பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பெண்ணை காயப்படுத்திய போலந்து நாட்டவர்கள் நாட்டை விட்டு வெளியேறியதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில், பாணந்துறை தலைமையக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதி செயலகத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 21 மணி நேரம் முன்

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

இனி 12 மணி நேரத்திற்கு பதில் 2 மணி நேரம் தான்.., ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில் இந்தியாவில் அறிமுகம் News Lankasri
