யாழ்.நகரில் உள்ள உணவகத்தில் விற்கப்பட்ட உணவில் புழுக்கள்(Video)
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள உணவகமொன்றில் விற்கப்பட்ட உணவில் புழுக்கள் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்.ஸ்டான்லி வீதியில் அமைந்துள்ள பிரபல சைவ உணவகத்தில் வழங்கப்பட்ட உணவிலே இந்த புழுக்கள் காணப்பட்டுள்ளன.
சுவையான புழு உணவு
இவ்வாறு உணவில் புழுக்கள் காணப்படும் காணொளியை ஒருவர் தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில்,“யாழ் ஸ்டான்லி வீதியில் உள்ள ஒரு பிரபல சைவ உணவகத்தில் வழங்கப்பட்ட உணவில் புழுக்கள். இதை தான் பலரும் ரசித்து ருசித்து உண்கிறார்கள்.
இப்படியான சுவையான புழு உணவு யாருக்கு வேண்டும்.”என பதிவிட்டுள்ளார்.
கரப்பான்பூச்சி வடை
இதேவேளை கடந்த நாட்களில் யாழில் உள்ள பிரபல சைவ உணவகம் ஒன்றில் விற்கப்பட்ட வடையில் கரப்பான்பூச்சி காணப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை எற்படுத்தி இருந்தது.
இதன் பின்னர் குறித்த உணவகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

ஒவ்வொரு எபிசோடுக்கும் இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா விஜய் டிவி தொகுப்பாளர்கள்... யாருக்கு அதிகம், முழு விவரம் Cineulagam

போர் தொடர்பான விடயங்களை துல்லியமாக கணிக்கும் ஜோதிடக்கலைஞர்: அமெரிக்கா குறித்து கணித்துள்ள விடயங்கள் News Lankasri

பாகிஸ்தான், சீனாவிற்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி., இந்தியா தயாரிக்கவுள்ள புதிய பினாகா ரொக்கெட் அமைப்பு News Lankasri
