பொதுவெளியில் தோன்றினார் சீன அதிபர் ஜி ஜின்பிங்
வடக்கு எல்லையில் சீனப்படையுடன் இந்தியா சண்டையிட்டு வரும் நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு உள்ளதாக சமூக வலைதளங்களில் வேகமாக செய்திகள் பரவியது.
சீன இராணுவ தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக இணையத்தில் பல பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
ஜி ஜின்பிங்

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) மாநாட்டில் பங்கேற்றுவிட்டு செப்டம்பர் 16ஆம் திகதி பெய்ஜிங் திரும்பிய ஜி ஜின்பிங், விமான நிலையத்தில் வைத்தே சீன இராணுவத்தால் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
ஆனாலும், இச் செய்திகள் குறித்து சீன அரசாங்கமும், அரச ஊடகமும் எந்தவொரு விளக்கத்தையும் இது தொடர்பில் வழங்கியிருக்கவில்லை.
பொது நிகழ்ச்சி ஒன்றில் சீன அதிபர்

இந்நிலையில், பொது நிகழ்ச்சி ஒன்றில் தற்போது சீன அதிபர் ஜின்பிங் தோன்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பெய்ஜிங்கில் நடந்து வரும் கண்காட்சி ஒன்றில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொண்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் 16 ஆம் திகதிக்கு பிறகு முதல் முறையாக பொது வெளியில் ஜின்பிங் தோன்றி உள்ளதால், சீனாவில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியதாக வெளியான செய்திகள் தவறானவை என தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
பெரும் நெருக்கடி நிலையால் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் - அமைச்சர் மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை
விறகு சேகரிக்க காட்டுக்குச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் : தேடிச் சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி