கதிரியக்க நீரை கடலில் வெளியேற்ற ஜப்பான் அரசு தீர்மானம்
பல்வேறு நாடுகளின் எதிர்ப்பை மீறி ஜப்பான் ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தின் கதிரியக்க நீரை கடலில் வெளியேற்றும் பணியை ஜப்பான் அரசு ஆரம்பித்துள்ளது.
அந்த வகையில் இந்த வெளியேற்றும் பணி இன்றையதினம் (24.08.2023) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2011-ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக ஃபுகுஷிமா அணு மின் நிலையத்துக்குள் கடல் நீா் புகுந்தது. இதனால் அங்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் அணு உலைகளை குளிா்விக்கும் இயக்கம் நின்று போனது.
ஐரோப்பிய யூனியனின் கட்டுப்பாடுகள்
அதையடுத்து, அந்த மின் நிலையத்தின் 3 அணு உலைகள் உருகின. அதிலிருந்த கதிரியக்க எரிபொருள்கள் கடலில் கலந்தன. அதையடுத்து, ஜப்பானிலிருந்து கடல் உணவுப் பொருள்களை இறக்குமதி செய்வதற்கு ஐரோப்பிய யூனியன் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.
அந்த விபத்துக்குப் பிறகு அணு உலைகளிலிருந்து கதிரியக்க நீா் வெளியேறியது. அதனை பெரிய தொட்டிகளில் அதிகாரிகள் தேக்கி வைத்தனா்.
தற்போது சுத்திகரிக்கப்பட்ட அந்த நீரை கடலில் கலக்க ஜப்பான் அரசு முடிவு செய்த நிலையில், ஜப்பான் சென்று அந்த நீரை ஆய்வு செய்த ஐ.நா. அணுசக்தி பாதுகாப்பு அமைப்பின் நிபுணா்கள், அதனை கடலில் கலப்பது பாதுகாப்பானதுதான் என்று கூறினா்.
எனினும், ஃபுகுஷிமா அணு உலை நீரை கடலில் கலப்பதற்கு சீனா, தென் கொரியா போன்ற நாடுகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளன. இதையும் படிக்க | இந்தியர்கள் ஊட்டச்சத்து குறைவான உணவையே உண்கின்றனர்:
அந்த நீரைக் கடலில் கலந்தால், ஜப்பானின் கடல் உணவுகளுக்கு தடை விதிக்கப்போவதாக சீனா மற்றும் ஹாங்காங் அரசுகள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் - காலை திருவிழா




