சங்கானையில் இடம்பெற்ற World vision Lanka நிறுவனத்தின் 'பசியை போக்குவோம்' நடைபவனி
வேள்ட் விஷன் லங்கா நிறுவனமானது சங்கானை சுகாதார அமைச்சு பணிமனையுடன் இணைந்து நடாத்திய "பசியை போக்குவோம்" எனும் மாபெரும் விழிப்புணர்வு நடைபவனியும் போசணைக் கண்காட்சியும் இன்றையதினம் நடைபெற்றது.
நடைபவனியானது சங்கானை பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆரம்பித்து சங்கானை கலாச்சார மண்டபத்தை சென்றடைந்தது. அங்கு விருந்தினர்களால் போசணைக் கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து போசணை பற்றிய விழிப்புணர்வு பொம்மலாட்டம் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு சங்கானை உதவி பிரதேச செயலாளர் பிரணவசொரூபி சிவகரன், பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் DR . A.கேதீஸ்வரன், வலிகாம வலய பிரதிக் கல்விப் பணிபாளர் சஞ்சீவன், சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி DR யதுநந்தனன், வலிகாமம் மேற்கு பிரதேச சபை தவிசாளர் சண்முகநாதன் ஜெயந்தன், ENOUGH Campaign முகாமையாளர் செல்வி லாவண்யா சூரியகுமார், World Vision முகாமையாளர் யூட் நிசாந்தன், அரச உத்தியோகத்தர்கள், World Vision உத்தியோகத்தர்கள், சங்கானை பிரதேச சிறுவர்கள், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் இணைந்து கொண்டனர்.
கண்காட்சியை பார்வையிடுவதற்கு சிறப்பாக மேலதிக வடமாகாணக் கல்விப் பணிப்பாளர் லாவண்யா சுகந்தன், சமுதாய வைத்திய நிபுணர் சிவகணேஸ் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் பாடசாலைச் சிற்றுண்டிச்சாலைகளில் அரச கொள்கை நியமங்களை உறுதியாக செயற்படுத்த வேண்டி மாணவர்களினால் கையொப்பமிட்ட விண்ணப்பக் கோரிக்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.



படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam
