அஸ்வெசும கொடுப்பனவு! 1.8 மில்லியன் மக்கள் குறித்து வெளியான தகவல்
அஸ்வெசும திட்டத்தின் மூலம் 1.8 மில்லியன் மக்கள் பயனடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர், கலாநிதி உபாலி பன்னிலகே இதனை தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் உபாலி பன்னிலகே இதனை குறிப்பிட்டுள்ளார்.
அஸ்வெசும திட்டம்
அஸ்வெசும நலன்புரி திட்டத்தை பெற்றுக்கொள்வதற்காக மேலும் 900,000 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அஸ்வெசும இரண்டாம் கட்டத்தின் கீழ், கொடுப்பனவுகளைப் பெறத் தகுதியுடையவர்களின் பட்டியலை நலன்புரி நன்மைகள் சபை நேற்று வெளியிட்டது.
இந்தப் பட்டியல் நலன்புரி நன்மைகள் சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் (www.wbb.gov.lk) வெளியிடப்பட்டுள்ளது.





வெளிநாடொன்றில் பிரபல இந்திய தம்பதி விபத்தில் பலி: பிள்ளைகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி News Lankasri
