குப்பைத் தொட்டியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட வர்த்தகரின் சடலம்!
வென்னப்புவ பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியிலிருந்து வர்த்தகர் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வென்னப்புவ - மாரவில பகுதியைச் சேர்ந்த குறித்த வர்த்தகரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் மீட்பு
குறித்த நபர் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அவருடைய வாகனத்துடன் காணாமல் போயிருந்த நிலையில், அவரது சடலம் இவ்வாறு குப்பைத் தொட்டியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பின்னர் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது அவரது வாகனம் ஒரு வீட்டிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
விசாரணை
அந்த வீட்டிலுள்ள நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்,வென்னப்புவ -சிரிகம்பொல பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் குப்பைத் தொட்டியில் காணாமல் போன வர்த்தகரின் சடலம் காணப்பட்டமை தெரியவந்துள்ளது.
கடந்த 30ஆம் திகதி இரவு, குறித்த வர்த்தகர் தனது ஐந்து நண்பர்களுடன் மது அருந்தியதாகவும், அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, வர்த்தகர் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு, குப்பை தொட்டியில் வீசப்பட்டதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam
