யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற அனைத்து உலக நாடக விழா
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் அனைத்து உலக நாடக விழா யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது இன்று(27.03.2024) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கத்தில் நடைபெற்றுள்ளது.
தொழில்வாண்மை நாடகக் கலைஞர்கள்
அனைத்துலக நாடக விழாவில் பல்கலைக்கழக, பாடசாலை மாணவர்களின் நாடகங்கள் மற்றும் தொழில்வாண்மை நாடகக் கலைஞர்களின் நாடகங்களும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந் நிகழ்வில் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம், துறைத்தலைவர்கள்,
விரிவுரையாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |