உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! வெல்லப் போவது யார்..
நடைபெற உள்ள 3ஆவது உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நடப்பு செம்பியன் அவுஸ்திரேலியா(Australia), தென் ஆபிரிக்கா(south africa) அணிகள் மோதுகின்றன.
இந்தப் போட்டி லண்டன் லோர்ட்சில் இன்று (இந்திய நேரப்படி) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது.
உலக டெஸ்ட் செம்பியன்ஷிப்
சர்வதேச கிரிக்கெட் பேரவை(ICC) கடந்த 2019ஆம் ஆண்டு உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் என்ற தொடரை உருவாக்கியது. இதன் முதலாவது சீசனில் நியூசிலாந்து அணியும், 2ஆவது சீசனில் அவுஸ்திரேலிய அணியும் கோப்பையைக் கைப்பற்றின.
இந்த இரு சீசன்களிலும் இந்திய அணி 2ஆவது இடம் பெற்றது. தற்போது 3ஆவது சீசனுக்கான இறுதிப்போட்டி இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ள நிலையில் இரண்டு அணிகளும் இறுதிப்போட்டியில் விளையாடும் பதினொரு வீரர்களை அறிவித்துள்ளது.
அவுஸ்திரேலியா அணி வீரர்கள்
உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுஷாக்னே, கேமரூன் கிரீன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட் , பியூ வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி (WK), பேட் கம்மின்ஸ் (C), மிட்செல் ஸ்டார்க், நேதன் லியோன், ஜோஷ் ஹேசில்வுட்
தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள்
எய்டன் மார்க்ரம், ரியான் ரிக்கில்டன், வியான் முல்டர், டெம்பா பவுமா (c), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் பெடிங்ஹாம், கைல் வெர்ரின் (wk), மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, லுங்கி நிகிடி
கடந்த ஒரு வாரமாக இரு அணி வீரர்களும் பயிற்சி மேற்கொண்டனர்.
ஐ.சி.சி. கோப்பையை வெல்ல நீண்ட காலமாக போராடி வரும் தென் ஆபிரிக்க அணியும், கோப்பையை தக்க வைக்க அவுஸ்திரேலிய அணியும் மோத உள்ளதால் இந்த ஆட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அணித்தலைவர் டெம்பா பவுமா இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் தோல்வியே அடையவில்லை.
அந்த பெருமையுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் டெம்பா பவுமா தலைமையில் தென் ஆபிரிக்க அணி களமிறங்குகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
