உலக டெஸ்ட் செம்பியன்சிப் போட்டிக்கு தயாராகும் லோட்ஸ்...!
2023- 2025ஆம் ஆண்டு காலப்பகுதி போட்டிகளை மையப்படுத்திய, உலக டெஸ்ட் செம்பியன்சிப் இறுதி போட்டி நாளை ஜூன் 11 ஆம் திகதி ஆரம்பமாகிறது.
லோட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில்,நடப்பு செம்பியன் அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் பங்கேற்கின்றன.
முன்னதாக, 2023 ஜூனில், ஓவலில் நடந்த உலக டெஸ்ட் செம்பியன்சிப் இறுதிப் போட்டியில், இந்தியாவை தோற்கடித்த அவுஸ்திரேலியா, கிண்ணத்தை சுவீகரித்தது. எனவே அந்த அணி, கிண்ணத்தை தக்கவைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இறுதி போட்டி
இந்தநிலையில் வலுவான தென்னாப்பிரிக்க அணியும், இந்தப்போட்டியில் கிண்ணத்தை சுவீகரிக்க முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டியில் டெம்பா பவுமா தலைமையில் களமிறங்கும் தென்னாப்பிரிக்க அணியில், டோனி டி சோர்சி, ரியான் ரிக்கெல்டன், ஐடன் மார்க்ராம், டேவிட் பெடிங்ஹாம், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கைல் வெர்ரெய்ன், வயான் முல்டர், மார்கோ ஜோன்சன், கார்பின் போஸ்;, ககிசோ ரபாடா, லுங்கி என்ஜிதி, டேன் மந்தர்சன், காசிசாவ், டேன் மந்தோரன் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
பெட் கம்மின்ஸின் தலைமையிலான அவுஸ்திரேலிய அணியில் உஸ்மான் கவாஜா, சேம் கோன்ஸ்டாஸ், மார்னஸ் லாபுஸ்காக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி, ஜோஸ் இங்க்லிஸ், கேமரூன் கிரீன், பியூ வெப்ஸ்டர், மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹாஸ்லூட், ஸ்கொட் போலண்ட், நாதன் லியோன், மட் குஹ்னெமன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

முழு நாட்டுக்கும் ஆபத்தாக மாறும் செயல்! ஜனாதிபதியை பதவி விலக கோரி நாமல் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள்
நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம் - 29.07.2025





யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam
