கல்வி அமைச்சின் தீர்மானத்திற்கு அதிபர்கள் எதிர்ப்பு
டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்த கல்வி அமைச்சின் தீர்மானத்திற்கு அதிபர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய ஆபத்துக்கள் காணப்படும் இடங்கள் பாடசாலை சூழலில் அடையாளம் காணப்பட்டால் அதிபர்கள் அதன் பொறுப்பினை ஏற்க வேண்டுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மாணவர்கள் பாதிப்பு
இது தொடர்பில் கல்வி அமைச்சு சுற்று நிருபம் ஒன்றை வெளியிட்டுள்ளது.இந்த தீர்மானத்திற்கு அதிபர்கள் தர அதிகாரிகள் சங்கம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
அரச அதிகாரிகளை பலி கொடுக்கும் வகையிலான நடவடிக்கைக்கு எதிராக அதிபர்கள் எதிர்வரும் 15ம் திகதியின் பின்னர் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
டெங்கு நுளம்புகள் பரவும் இடங்கள் பாடசாலை வளாகத்தில் அடையாளம் காணப்பட்டால் அதிபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட முடியும் என்ற வகையில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்று நிருபத்திற்கு அதிபர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
நாட்டில் டெங்கு மற்றும் சிக்கன்குன்யா நோய்களினால் பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்படுவதாக சுகாதார துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.





தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri
