இலங்கை கிரிக்கெட் அணிக்கான 2024 விருதுகள்! சாமரியின் சாதனை
இலங்கை கிரிக்கெட் அணிக்கான 2024 ஆம் ஆண்டுக்கான விருதுகள் நிகழ்வில், சாமரி அத்தபத்து பல விருதுகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.
2024 இலங்கை கிரிக்கெட் விருது நிகழ்வு, நேற்று மாலை கொழும்பில் நடைபெற்றது.

முழு நாட்டுக்கும் ஆபத்தாக மாறும் செயல்! ஜனாதிபதியை பதவி விலக கோரி நாமல் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள்
இதன்படி, பெண்களுக்கான சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில், சிறந்த அனைத்துத்துறை வீராங்கனையாக சாமரி அத்தபத்துவும், சிறந்த பந்து வீச்சாளராக கவீசா தில்ஹாரியும், சிறந்த துடுப்பாட்ட வீராங்கனையாக-சாமரி அத்தபத்துவும் விருதுகளை பெற்றனர்.
விருதுகள்
பெண்களின் சர்வதேச 20க்கு20 போட்டிகளில் சிறந்த அனைத்துத்துறை வீராங்கனை விருது சாமரி அத்தபத்துவுக்கு வழங்கப்பட்டது. சிறந்த துடுப்பாட்ட மற்றும் சிறந்த பந்துவீச்சாளர் என்ற மூன்று விருதுகளும் சாமரி அத்தபத்துவுக்கு வழங்கப்பட்டன.
இதன்படி கமிந்து மெண்டிஸ் இந்த ஆண்டின் ஆண்கள் கிரிக்கெட் வீரருக்கான விருதை பெற்றார்.
அதே நேரத்தில் இலங்கை பெண்கள் அணியின் தலைவி சாமரி அத்தபத்து, இந்த ஆண்டின் மகளிர் கிரிக்கெட் வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டு விருதைப் பெற்றார்.
அனைத்துத்துறை ஆட்ட வீரர்
ஆண்டின் வளர்ந்து வரும் வீரர் - ஜனித் லயனகே விருது பெற்றார். டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த அனைத்துத்துறை ஆட்ட வீரராக தனஞ்சய டி சில்வா, சிறந்த பந்து வீச்சாளர் - பிரபாத் ஜெயசூரிய, சிறந்த துடுப்பாட்ட வீரராக கமிந்து மெண்டிஸ் ஆகியோர் விருதுகளை பெற்றனர்.
ஆண்கள் ஒரு நாள் சர்வதேச போட்டிகளில், சிறந்த அனைத்துத்துறை ஆட்ட வீரராக, சரித் அசலங்கவும், சிறந்த துடுப்பாட்ட வீரராக பத்தும் நிசங்கவும், சிறந்த பந்து வீச்சாளராக வனிந்து ஹசரங்கவும் விருதுகளை பெற்றனர்.
20க்கு20 சர்வதேச போட்டிகளில், சிறந்த துடுப்பாட்ட வீரராக குசல் மெண்டிஸ்,சிறந்த அனைத்துத்துறை ஆட்ட வீரராக வனிந்து ஹசரங்க மற்றும் சிறந்த பந்து வீச்சாளராக வனிந்து ஹசரங்க ஆகியோர் விருதுகளை பெற்றனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
