உலகின் மிகவும் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை
ரஷ்யா தனது அதிநவீன கண்டம் விட்டு கண்டம் பாயும் 'சர்மத்' ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளதாக ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார்.
நேற்றையதினம்(12.5.2026) நடைபெற்ற இந்தச் சோதனையைத் தொடர்ந்து உரையாற்றிய அவர், இந்த ஏவுகணை உலகின் "மிகவும் சக்திவாய்ந்த" ஆயுதம் என்றும், இதன் வெடிதிறன் மேற்கத்திய நாடுகளின் ஏவுகணைகளை விட நான்கு மடங்கு அதிகம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 35,000 கி.மீ தொலைவு வரை பாயும் திறன் கொண்ட இந்த ஏவுகணை, தற்போதுள்ள மற்றும் எதிர்கால ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகளை ஊடுருவிச் செல்லும் வல்லமை கொண்டது என ரஷ்யா உரிமை கோருகிறது.
அணு ஆயுதக் கட்டுப்பாட்டு
எதிர்வரும் ஆண்டு இறுதிக்குள் இது முழுமையான இராணுவப் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான 'நியூ ஸ்டார்ட்' அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம் கடந்த பெப்ரவரி மாதம் காலாவதியான நிலையில், இந்த ஏவுகணைச் சோதனை முக்கியத்துவம் பெறுகிறது.
அரை நூற்றாண்டு காலத்திற்குப் பிறகு, உலகின் இரு பெரும் அணுசக்தி நாடுகளுக்கிடையே தற்போது முறையான ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தங்கள் ஏதுமில்லை.
பேச்சுவார்த்தை
இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அணு ஆயுதக் கட்டுப்பாட்டுப் பேச்சுவார்த்தையில் சீனாவையும் இணைக்க வலியுறுத்தி வரும் சூழலில், ரஷ்யா தனது அணுசக்தித் திறனைத் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.

சர்மத் ஏவுகணை தவிர, ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மற்றும் அணுசக்தியில் இயங்கும் நீருக்கடியில் செல்லும் ட்ரோன்களையும் ரஷ்யா உருவாக்கி வருவது உலக நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஈஸ்வரியை ஜனனிக்கு எதிராக மாற்றும் கதிர், தர்ஷனார் வரப்போகும் பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam