இங்கிலாந்தில் உலகின் மிகப்பெரிய கால்பந்து மைதானம்..!
இங்கிலாந்தில் ஒரு லட்சம் ரசிகர்கள் அமரும் வகையில் சுமார் ரூ.20,000 கோடியில் புதிய கால்பந்து மைதானம் அமையவுள்ளது.
இங்கிலாந்தின் மென்செஸ்டர் நகரில் அமையவுள்ள 100,000 இருக்கைகள் கொண்ட புதிய மைதானத்திற்கான திட்டங்களை மான்செஸ்டர் யுனைடெட் கிளப் வெளியிட்டுள்ளது.
இது இங்கிலாந்தில் ஏற்கெனவே இருக்கும் 90,000 இருக்கைகளைக் கொண்ட வெம்பிளி மைதானத்தை விஞ்சும் அளவில் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகப்பெரிய கால்பந்து மைதானம்
இந்த மைதான கட்டுமானத்துக்கு மொத்தமாக 2 பில்லியன் யூரோ வரை செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.
எனினும், மைதான கட்டுமானத்திற்கான முழுச் செலவையோ, காலக்கெடுவையோ யுனைடெட் வெளியிடாத நிலையில் கட்டடக் கலைஞர் நார்மன் ஃபாஸ்டர் கட்டுமானப் பணிகளுக்கு ஐந்து ஆண்டுகள் ஆகும் எனத் தெரிவித்துள்ளார்.
பிரிட்டிஷ் கோடீஸ்வரர் ராட்க்ளிஃப் கடந்த ஆண்டு யுனைடெட்டில் ஆரம்ப 25% பங்குகளுக்கு டொலர் 1.3 பில்லியனை செலுத்தியுள்ளார்.
வேலைவாய்ப்புகள்
இந்த திட்டத்திற்கு இங்கிலாந்து அரசாங்கம் ஏற்கெனவே தனது ஆதரவை தெரிவித்துள்ளது.
அந்த வகையில், இந்த மைதான கட்டுமான பணியில் சுமார் 92,000 வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் புதிய மைதானம் உலகின் மிகச்சிறந்த கால்பந்து மைதானமாக இருக்கும் என்று மைதானத்தின் இணை உரிமையாளர் ஜிம் ராட்க்ளிஃப் தெரிவித்துள்ளார்.
மென்செஸ்டர் யுனைடெட்
மேலும், இந்தப் புதிய மைதான கட்டுமானத்தின்போது மென்செஸ்டர் வீரர்கள் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்திலேயே விளையாடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, 116 ஆண்டுகள் பழமையான வரலாற்று சிறப்புமிக்க ஓல்ட் டிராஃபோர்டை மறுவடிவமைப்பதா என்பதை மான்செஸ்டர் யுனைடெட் முன்னதாக ஆராய்ந்து வந்தது.
ஆனால் இப்போது பழைய மைதானத்திற்கு பதிலாக புதிய மைதானத்தை கட்டுவதாகத் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியலின் நேரம் மாற்றம்.. எந்தெந்த தொடர், முழு விவரம் Cineulagam

அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படத்தின் ரிலீஸ்.. எப்போது தெரியுமா? Cineulagam
