இடிந்து விழுந்த உலகின் மிகப்பெரிய செப்புச் சுரங்கம் : இருவர் பலி
சிலியில் உள்ள உலகின் மிகப்பெரிய செப்புச் சுரங்கம் இடிந்து விழுந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்ததுடன், 5 தொழிலாளர்கள் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
900 மீற்றருக்கும் அதிகமான ஆழத்தில்
நாட்டில் ஏற்பட்ட சில அதிர்வு காரணமாக இந்த சுரங்கம் இடிந்து வீழ்ந்துள்ளது.
Two people are now confirmed dead after a partial collapse at the world's largest underground copper mine in Chile on Thursday (July 31), following the discovery of human remains by rescue operations teams. pic.twitter.com/s9X0BCW91P
— The Star (@staronline) August 3, 2025
குறித்த சம்பவத்தின் போது 900 மீற்றருக்கும் அதிகமான ஆழத்தில் தொழிலாளர்கள் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகின்றது.
மேலும், 100க்கும் மேற்பட்டோர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.




