வட கொரிய அதிபரின் தந்தை பிறந்தபோது வானத்தில் தென்பட்ட “அதிசயம்”
கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டிருப்பதாக கூறப்படும் வடகொரியாவில், எயோசியேட்ஸ் பிரஸின் செய்தி நிறுவனத்தின் அலுவலத்தை திறக்க அனுமதி கிடைத்த முதல் அமரிக்கராக ஜீன் லீ என்பவர் கருதப்படுகிறார்.
2011ஆம் ஆண்டு அவர் வடகொரியாவின் பியோங்யாங்கில் அலுவலத்தை திறந்தார்.
அவர் அங்கு பணியாற்றியபோது வட கொரியாவை பற்றி பல அறிக்கைகளை வெளியிட்டார்.
வடகொரியாவின் பண்ணைகள், தொழிற்சாலைகள், பாடசாலைகள், இராணுவக்கல்லுாரிகள்,வீடுகள் தொடர்பாக அவர் பல முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார். அதிபர் கிம் ஜாங்-உன் னின் ஆட்சியில் கண்காணிப்பு நிலை தீவிரமாக இருந்தது.
அதிகாரிகள் தங்கள் நாட்டில் செய்தியாளர்கள் மீது பாரதுாரமான அவநம்பிக்கையை வைத்திருப்பதாக லீ தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்கள், தற்போதுள்ள அதிகார கட்டமைப்பை தகர்ப்பதில் தொடர்ந்து ஆபத்தை ஏற்படுத்தும் பிரசாரகர்களாக பார்க்கப்படுவதாக லீ குறிப்பிட்டுள்ளார்.
வடகொரியாவுக்கு செல்வோர் தம்மை எந்நேரமும் கண்காணிக்கும் சாதனங்கள் உள்ளன என்பதை அறிந்திருக்கவேண்டும்
வட கொரியாவுக்குச் செல்லும் எவருக்கும், அவர்கள் தங்கியிருக்கும் விருந்தகங்களில் கண்காணிப்பு சாதனங்கள், கேட்கும் ஒலிப்பதிவுச் சாதனங்கள் உள்ளன என்பதை அறிந்திருக்க வேண்டும்.
வடகொரியாவில் அறியப்படாத சட்டத்தை மீறினால் கைது செய்யப்படுவதற்கான ஆபத்து எப்போதும் அதிகமாக உள்ளது.
வடகொரியாவுக்கு ஒருவர் சென்றால், அங்கு வாழ்வதற்கும் வேலை செய்வதற்கும் சவால்களும் உள்ளன.
சில வேளைகளில் “உங்கள் தலையை சுவரில் முட்டிக்கொள்வது போல் இருக்கும்” என்றும் ஜீன் லீ குறிப்பிட்டுள்ளார்.
வடகொரியாவின் மறைந்த தலைவரும் தற்போதைய அதிபரின் தந்தையுமான கிம் ஜோங் இல் "புனித மலையில்" பிறந்தார் என்றும் அவர் பிறக்கும் போது வானத்தில் இரண்டு வானவில்லுகள் தோன்றின என்றும் குழந்தைகளுக்கு கற்பிக்கப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.
அதிபர் கிம்-உன் ஆட்சிக்கு வந்ததில் இருந்து பொருளாதார முன்னேற்றம் மற்றும் நாட்டின் அணு ஆயுதங்கள் வளர்ச்சி அடைந்துள்ளன.
அவர் பொதுவாக அவர் தன்னை நியாயந்தீர்க்க விரும்புவதாக சித்தரிப்பதாக ஊடகவியலாளர் ஜீன் லீ குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அதிபர் கிம்-உன் னின் தந்தையான 10ஆண்டு நினைவு நாள் இன்று அனுஸ்டிக்கப்படுகிறது. இதனையடுத்து நாட்டில் 11 நாட்களுக்கு எவரும் சிரிக்கக்கூடாது என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

சிந்துநதி நீர் நிறுத்தத்தால்.., பாகிஸ்தான் நடிகைக்கு தண்ணீர் போத்தல்களை அனுப்பிய இந்திய ரசிகர் News Lankasri

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri
