லசந்த விக்கிரமதுங்க கொலை! கடைசி தருவாயில் மகிந்தவுக்கு சென்ற அழைப்பு
ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கூரிய ஆயுதத்தால் தாலையில் குத்தப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார் என்றும், அன்று அந்த கொலையில் ஏதோ ஒரு அறிவிப்பு வெளிப்படுத்தியதாவே தோன்றியது என லசந்த விக்கிரமதுங்க நண்பர் (PieterDAlmeida) பீட்டர் டி. அல்மெய்டா கூறியுள்ளார்.
'குற்றத்திற்கான இராச்சியம் - சுருக்கப்படாத அத்தியாயம்' என்ற புத்தக வெளியீட்டு விழா மற்றும் கலந்துரையாடலில் கலந்துக்கொண்ட அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்துரையாற்றிய பீட்டர் டி. அல்மெய்டா, லசந்த கடைசி தருவாயில் அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு தொலைபேசியில் பேசுகிறார்.
லசந்த பேசிய கடைசி தொலைபேசி
ஆனால் கொலையாளிகளின் நோக்கம் யாருடனும் தொடர்பிருந்தாலும் எங்கள் முடிவில் மாற்றமில்லை என்பதாகவே இருந்தது.
லந்தவுக்கு மகிந்தவுடன் நெருங்கிய தொடர்பிருந்ததால் தனக்கு ஒன்றும் நடக்காது என்று நினைத்தாரோ, அதை நமக்கு ஊகிக்க முடியாத காரணியாகலாம்.
லசந்த விக்கிரமதுங்கவை ஒரு ஊடவியலாளராகவே உங்களுக்கு தெரியும். ஆனால் சிறு வயது முதல் எனது நணபர். அக்காலத்தில் அவன் பெரும் குழப்படி. கல்வியில் பெரு நாட்டம் காட்டவில்லை.
அரசியல் ஈடுபாடு
லண்டன் சென்ற வந்த பின்னர் அவரின் அரசியல் ஈடுபாடுகளில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருந்தது.
கொல்லப்பட்ட அன்று வியாழக்கிழமை. அவருக்கு வேலைப்பளு அதிகமான நாள். கட்டாயம் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும். அவர் வழமையாக எழுதும் ஆசிரியர் தலையங்கத்தை தனது கையாலேயே எழுதுவார். கணினியில் பதிவு செய்யமாட்டார்.
ஊடகவியலாளர் என்ற வகையில் தனது கடமைசெய்ய வேண்டும் என நினைத்தார். அவர் ஒரு தைரியமானவர். தைரியம் என்பது பயமில்லை என்பதல்ல. பயத்தை வெற்றிக் கொள்ளவதாகும்” என கூறியுள்ளார்.
you may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



