யாழில் சட்டவிரோதமாக ஜோதிட நிலையத்தை நடாத்திய மூவர் கைது
பருத்தித்துறை தும்பளை வீதியில் சட்டவிரோத ஜோதிட நிலையம் அமைத்து இயங்கி வந்த இந்திய பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையம் தொடர்பாக தும்பளை பிரிதேச கிராம அலுவர் பருத்தித்துறை நகரசபை தவிசாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
மூவர் கைது
இந்த விடயம் தொடர்பில் நேற்றுமுன்தினம்(29) பருத்தித்துறை நகர பிதா நேரில் சென்று அவதானித்து குறித்த இந்தியர்களை வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

ஆனாலும் நேற்றையதினம்(30) ஜோதிட நிலையம் இயங்கி வந்ததை அடுத்து நகரபிதா பருத்தித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இந்தியப் பிரஜைகளின் கடவுச் சீட்டை பரிசோதனை செய்த போது குறித்த மூவரும் சுற்றுலா வீசாவில் நாட்டிற்குள் வந்துள்ளமை தெரியவந்தது.
இதனையடுத்து சட்டவிரோத ஜோதிட நிலையம் அமைத்து இயக்கி வந்த மூன்று இந்தியப் பிரஜைகளையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வெண்ணிலா சொன்ன விஷயத்தை கேட்டு கடும் ஷாக்கில் கண்மணி, என்ன முடிவு எடுப்பார்.. அன்புடன் கண்மணி புரொமோ Cineulagam
Bigg Boss: மேடையிலேயே வாந்தி எடுத்து மாஸ் காட்டிய விஜய் சேதுபதி! அடுக்கி வைத்துள்ள ரெட் கார்டு Manithan
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan