இந்து ஆலயங்களை பாதுகாக்க பலமான அமைச்சு வேண்டும்! உலக இந்துக்குழு மோடிக்கு கடிதம்

Sri Lanka Narendra Modi India
By Kajinthan Apr 12, 2023 10:11 PM GMT
Report

வடக்கு கிழக்கில் உள்ள இந்து ஆலயங்களை பாதுகாப்பதற்கு புத்தசாசன அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் போன்று இந்து மத விவகார அமைச்சிக்கும் அதிகாரங்கள் வழங்கப்படுவதை இந்தியா உறுதி செய்ய வேண்டும் என உலக இந்து குழுவின் உறுப்பினரும் ஊடகவியலாளமான கல்பனா சிங் இந்தியா மத்திய அமைச்சுக்கு தமது குழு எழுத்து மூலம் கடிதம் அனுப்பியுள்ளார்.

அவரது கடிதத்தில் குறிப்பிடப்பட்டதாவது,

இலங்கையில் உள்நாட்டுப் போரின் போது 2000க்கும் மேற்பட்ட இந்து கோவில்கள் இலங்கை இராணுவத்தால் அழிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் (2009க்குப் பின்) இந்து மக்களின் கோவில்கள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் நுழைவதை ஸ்ரீலங்கா இராணுவத்தின் மறைவின் கீழ் இயங்கும் புத்த பிக்குகள் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தின் தீவிர ஈடுபாட்டினால் சில பழைய இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்டன. அது மட்டுமல்லாது வலுக்கட்டாயமாக மாற்றப்படுகின்றன (சில சந்தர்ப்பங்களில் நீதிமன்ற உத்தரவுகளை பௌத்த பிக்குகளால் மீறுகின்ற நிலையும் காணப்படுகிறது.

இலங்கையின் கிழக்குப் பகுதியில் இந்தச் செயற்பாடு அதிகமாகக் காணப்படுகின்றது, எனினும் தீவின் வடக்குப் பகுதியில் உள்ள சில கோவில்களும் பௌத்தர்களின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

இந்து ஆலயங்களை பாதுகாக்க பலமான அமைச்சு வேண்டும்! உலக இந்துக்குழு மோடிக்கு கடிதம் | World Hindu Organization Letter To Modi

இந்தியா உதவிகளை பெற்றுவரும் இலங்கைத் தொல்பொருள் திணைக்களமும் இராணுவமும் இந்து மத வழிபாட்டுத் தலங்களை திட்டமிட்ட முறையில் தொடர்ந்து சேதப்படுத்தி வருகின்றன.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவுக்கு விஜயம் செய்ய தீர்மானித்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக உலகெங்கிலும் உள்ள இந்து அமைப்புகள் மத்தியில் கடும் கோபம் நிலவுகிறது.

கலாச்சார குற்றம்

தொல்பொருள் திணைக்களம் மற்றும் சில போர்க்குணமிக்க பௌத்த துறவிகள் சில பழைய இந்து கோவில்களை சேதப்படுத்துவது, பெயர்மாற்றுவது மற்றும் புத்த அடையாளமாக மாற்றுவது சகிக்க முடியாத கலாச்சார குற்றமாக கருதப்படுகிறது.

இந்துப் போராட்டக் குழுவின் உள்நாட்டுத் தலைவர் ஸ்ரீ அவுன் உபாத்யாய், இது இந்துக்களுக்கும் இந்தியாவுக்கும் எதிரான தீங்கிழைக்கும் செயல் என்று கடுமையாகக் கண்டித்துள்ளார்.

மேலும் “இந்திய அரசும் இந்த விவகாரத்தை அறிந்து, விக்கிரமசிங்க இந்தியாவுக்கு வரும்போது கடும் ஆட்சேபனை தெரிவிக்க வேண்டும்” என்றார்.

இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியின் போது, ​​இலங்கையில் உள்ள இந்துக் கோவில்களை இலங்கை அரசு அழித்துக் கொண்டிருந்தால், இந்த நடவடிக்கை நட்பு நாடுகளுக்கு ஆபத்தான அணுகுமுறையாக இருக்கும்.

இந்து ஆலயங்களை பாதுகாக்க பலமான அமைச்சு வேண்டும்! உலக இந்துக்குழு மோடிக்கு கடிதம் | World Hindu Organization Letter To Modi

இந்திய சுற்றுலாப்பயணிகள், இராமாயண பாதையின் மத இடங்கள், அங்குள்ள பழங்கால கோவில்கள் மற்றும் கலாச்சார தளங்களை பார்வையிடுகிறார்கள், மற்றும் இந்தியர்கள் இலங்கையின் சுற்றுலாத்துறையின் மிகப்பெரிய அங்கமாக உள்ளனர்.

இவ்வாறான நிலையில், இலங்கை அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகளை ஊக்குவிப்பது சுற்றுலாத்துறையை பாதிக்கும். இந்த விவகாரத்தில் இந்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என தீர்மானம் எடுத்துள்ளோம்.

சர்வதேச நன்கொடையாளர்களுக்கு அழுத்தம்

எமது குழு வேண்டுகோள் விடுக்கிறது: புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் போன்ற அதிகாரங்களைக் கொண்ட இந்து சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சை மீண்டும் நிறுவுவதற்கு இலங்கை அரசாங்கத்தை வற்புறுத்துவதற்கு இந்திய அரசாங்கமும் சர்வதேச நன்கொடையாளர்களும் அழுத்தம் விடுக்க வேண்டும்.

இலங்கையில் இந்து பாரம்பரியத்தை பாதுகாத்து மீண்டும் கட்டியெழுப்புதல். இந்து பாரம்பரியத்தின் சிறந்த உலகளாவிய மதிப்பை இலங்கையில் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக யுனெஸ்கோவின் சமய நலன்களின் பாரம்பரியம் கையில் எடுக்க வேண்டும்.

அத்தோடு இந்து மதப் பாரம்பரியத்தின் உடனடி அழிவைத் தடுக்க, தீவின் வடக்கு-கிழக்கு பிராந்தியத்திற்கான இடைக்கால சர்வதேச பாதுகாப்பு பொறிமுறையை நிறுவ இலங்கையை இந்திய அரசாங்கம் வலியுறுத்த வேண்டும் என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US