உலக சுகாதார நிறுவன வல்லுநர்கள் குழு சீனாவில்!
கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து ஆராயும் உலக சுகாதார நிறுவன வல்லுநர்கள் குழு இன்று சீனாவில் கொரோனா தொற்றாளிகள் முதலில் அனுமதிக்கப்பட்ட வுஹான் மருத்துவமனையில் பணியாளர்களை சந்தித்தது.
மத்திய சீன நகரத்தில் வைரஸின் தோற்றம் வெளிவந்தமையை அடுத்து முதன்முதலாக ஜின்யின்டன் என்ற இந்த மருத்துவமனையிலேயே நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் கொரோனா வைரஸ் முதலில் தோன்றி ஒரு வருடம் கழித்து வல்லுநர்கள் எதனைக் கண்டுபிடிப்பார்கள் என்று கேள்விகள் தொடுக்கப்பட்டுள்ளன.
இது ஒரு சிக்கலான விடயமாகும். எனினும் தரவுகளை சேகரிப்பதே தமது நோக்கம் என்று உலக சுகாதார அமைப்பின் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வல்லுநர்கள், கொரோனா தொற்று ஆரம்பித்ததாக கூறப்படும் வுஹான் ஆய்வகம், தொற்றின் முதல் பிரதேசமான ஹவானன் சந்தை ஆகியவற்றை பார்வையிடவுள்ளனர்.





10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam
