இனிய பாரதியின் இன்னுமொரு சகா அதிரடி கைது
இனியபாரதியின் இன்னுமொரு சகாவான வெலிகந்தை தீவுச்சேனையைச் சேர்ந்த பாலிகிருஷ்ணன் சபாபதி மட்டக்களப்பு கிரானில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பில் இருந்து சென்ற குற்ற விசாரணைப் பிரிவினர் இன்று செவ்வாய்க்கிழமை(29) மாலை 4.00 மணியளவில் அவரை கைது செய்துள்ளனர்.
ரி.எம்.வி.பி கட்சியைச் சேர்ந்த கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஒருங்கிணைப்பாளருமான இனியபாரதி என அழைக்கப்படும் கே. புஷ்பகுமார் மற்றும் அவரது சகாவான சசீந்திரன் தவசீலன் ஆகியோர் கடந்த 28ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.
திருக்கோவில் பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் படுகொலை தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றிருந்தது.
இனியபாரதியின் சகாக்கள்
இதில் கைது செய்த இனியபாரதியிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் வெலிகந்தை தீவுச்சேனையை வதைமுகாமில் இருந்து செயற்பட்டு வந்தவரும் இனிய பாரதியின் சகாவான அந்த பிரதேசத்தைச் சேர்ந்த சபாபதி இன்று கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவரை கொழும்புக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கையை சிஜடியினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, இனியபாரதியின் கைதினை தொடர்ந்து, அவரது முன்னாள் சாரதி செந்தூரன், அவரது சாகாவான சந்திவெளியைச் சேர்ந்த சசீந்திரன் தவசீலன் மற்றும் சகாவான திருக்கோவில் விநாயகபுரத்தைச் சேர்ந்த தொப்பி மனாப் என்றழைக்கப்படும் விக்கினேஸ்வரன் மற்றும் தற்போது கைது செய்யப்பட்டவர் உட்பட இனியபாரதியின் சகாக்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
